Connect with us

News

யூடியூப் நாகை மீனவன் படகில் 150 கிலோ கஞ்சா !!!

Published

on

பிரபல யூடியூப் நடத்திவரும் நாகை மாவட்டத்தை சேர்ந்த குணசீலன் என்பவருக்கு சொந்தமான படகில் 1கோடி மதிப்பிலான கஞ்சா உள்பட பல போதைப்பொருட்கள் சுங்கத்துறை காவல் அதிகாரிகளால் நேற்றிரவு கைப்பற்றப்பட்டது.

குணசேகரன் என்பவர் நாகை மீனவர் என்ற பெயரில் மிகப்பெரிய அளவிலான யூட்யூப் சேனல் நடத்தி வந்தார். தற்போது நேற்று இரவு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட தயாராக இருப்பதாக சுங்கத்துறை காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது.

இதனையடுத்து உரிய அதிகாரிகள் விரைந்து சென்றனர். அதிகாரிகளை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. அவர்களிடம் இருந்து 250 கிலோ மதிப்பிலான கஞ்சா மற்றும் பல தர போதை பொருள்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

விசாரணையின் போது அந்த படகு நாகை மீனவர் என்ற யூடியூப் சேனல் நடத்திவரும் குணசீலன் என்பவருக்கு சொந்தமானது என்று அதிகாரப்பூர்வமாக தெரியவந்தது.

இதனால் குணசீலன் ஐ காவல் அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாகி விட்டாரா அல்லது கடலுக்குள் சென்று உள்ளாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending