Connect with us

News

மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை நீடிக்கும்

Published

on

வங்கக்கடலில் வலுவடைந்து உள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்க கடலில் சனிக்கிழமை உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.

மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வட மேற்கு வங்கத்தில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகள் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் விடை கிடைக்கும் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நாகை பாம்பன் தூத்துக்குடி புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending