Connect with us
முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து !! முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து !!

News

முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து !

Published

on

இன்று 08-12-2021 சூலூரில் இருந்து குன்னூர் நீலகிரி பகுதியில் 3 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளது அதில் மூன்றும் எம் ஐ ரக ஹெலிகாப்டர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அதில் ஒரு ஹெலிகாப்டர் குன்னூர் அருகே ஒரு அடர்ந்த காடு பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது இதில் 14 பேர் பயணித்துள்ளனர் அதில் இரண்டு பேரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இறந்த நிலையில் ஐந்து உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன இதுகுறித்து விசாரணை நடந்து கொண்டு வருகிறது இந்த ஹெலிகாப்டரில் கிரி எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து !!
முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து

இந்த விமானத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி விமானத்தில் சென்றுள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மேலும் இது போன்ற முக்கியமான பெரிய நபர்கள் செல்லும் ஹெலிகாப்டரில் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த இடங்களில் மிகுந்த மேகமூட்டம் இருந்ததால் இந்த விபத்து நேர்ந்து இருக்கும் எனவும் கூறப்படுகிறது எதுவாக இருந்தாலும் விசாரணையின் முடிவில் தான் தெரியும் எனவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து நடந்த தன் அருகில் குடியிருப்பு பகுதிகளும் அமைந்திருந்தன அந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.

சரியாக இன்று 12 மணியளவில் இந்த விபத்து நடந்தது உடனடியாக தீயணைப்புத் துறையினர் அங்கு வந்துள்ளனர் இப்போது பல உடல்களை கண்டுபிடித்து எடுத்துச் சென்று கொண்டு வருகின்றனர் மேலும் உயிருடனும் சில நபர்களை காப்பாற்றியுள்ளனர் ஆனால் அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Update

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மேலும் பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending