Connect with us
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை !!! முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை !!!

News

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை !

Published

on

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மற்றும் அவருக்கு சொந்தமான 69 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறது இதில் அவர் பல கோடி ரூபாய் வருமானத்தை தடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்கள் அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் அவரது பினாமிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சோதனையில் சுமார் 160க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது மேலும் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மட்டும் இவர் கணக்கில் காட்டாமல் அவரது வருமானத்தை விட அதிகமாக 4.85 கோடி ரூபாய் இருந்தது கண்டு பிடித்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

இதன் காரணமாக தங்கமணி மற்றும் தங்கமணி மனைவி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் இந்த சோதனையானது தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடந்து கொண்டு வருகிறது.

மேலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதில் 2.16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending