Connect with us

Corona

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயபடுத்த கூடாது

Published

on

மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை ஐகோர்ட் எச்சரிக்கை!!

கொரோனா தொற்று வெகுவாக குறையும் நிலையில் தமிழகத்தில் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சுழற்சி முறையில் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது மற்றும் பள்ளிகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வரத்தேவையில்லை வீட்டில் இருந்தபடியே படிக்க வேண்டுமென்றால் படிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்திருந்தார்.

தற்போது தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மாணவர்களை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு வர வைக்கும் திட்டத்தில் ஈடுபடுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு தொடரப்பட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்த நீதிபதி அதிரடி தீர்ப்பை அறிவித்தார். தனியார் பள்ளிகள் மாணவர்களை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு வர வைத்து அவரிடம் இருந்து காசு வசூலிப்பதாக 2 தனியார் பள்ளிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் இதுபோன்று மேலும் மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிகளுக்கு வர வைத்தால் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending