Connect with us
மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை !!! மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை !!!

News

மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை !

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதில்லை ஆன்லைன் வகுப்புகள் என வீட்டிலேயே படித்துக் கொண்டிருந்தனர்.

தற்போது பள்ளி கல்லூரிகள் திறந்தவுடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர் தற்போது கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்திருந்தது.

இதன் காரணமாக கொரோனா காலகட்டத்தில் மாணவர்களுக்கு படிக்க கடினமாக இருக்கும் என பாடப்புத்தகத்தில் பாடங்கள் குறைக்கப்பட்டன இதன் காரணமாக மாணவர்கள் சிறிதளவு மன அழுத்தம் குறையும் என அரசு அறிவித்திருந்தது.

தற்போது கனமழை காரணமாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பாடத்திட்டங்கள் குறையுமா என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் கேட்டிருந்த போது அவர் ஏற்கனவே பாடத்திட்டத்தை மிகவும் குறைத்து உள்ளோம்.

இதன் பிறகு எந்த பாடத்திட்டத்தில் ஐயும் சிறிதளவும் குறைக்க முடியாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மா அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending