Connect with us

Corona

மாணவர்களுக்கு தடுப்பூசி இன்று தொடக்கம்!!

Published

on

தமிழக அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இன்று கூறியுள்ளார். அவர் கூறிய பேட்டியில் கொரோனா மூன்றாவது அறையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பல நாடுகளில் நமது இந்திய நாடும் இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் மூன்றாவது அறை தமிழகத்தை தாக்க கூடும் என எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்துவருகிறது..(மாணவர்களுக்கு தடுப்பூசி)

இருப்பினும் பல மாதங்களாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டால் கொரோனா மூன்றாவது அலை மிக விரைவில் நமது இந்திய நாட்டை தாக்க நேரிடும் இதை தவிர்க்கும் வகையில் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் இந்திய நாட்டின் வருங்கால தூண்கள் என்ற நோக்கத்தில் அனைத்து இடங்களிலும் செப்டம்பர் 1 முதல் கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்படும் மற்றும் செப்டம்பர் 1 முதல் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் முக கவசம் இருந்தால் மட்டுமே கல்லூரிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்.

மேலும் அவர் கூறிய செய்தியில் மிக விரைவில் 1 முதல் 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி இடப்படும் எனவும் பள்ளிகள் சுழற்சி முறையில் இயங்குவது நல்ல திட்டம் எனவும் கல்வி அமைச்சரை பாராட்டி கூறியுள்ளார் நமது மக்கள் சுகாதார அமைச்சர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending