Connect with us

Corona

மாணவர்களுக்கு கெரோனா நெறிமுறைகள் !!!

Published

on

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கல்லூரிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது (மாணவர்களுக்கு கெரோனா ).

கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவின்படி பல்வேறு மண்டல இணை இயக்குநர்கள் அதற்கான வழி காட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி வெளியாகி இருக்கக்கூடிய வழி காட்டு நெறிமுறைகளில் 13 வகையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அனைத்து கல்லூரிகளும் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இருதவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கட்டாயமாக விடுப்பு கொடுத்து அனுப்பி வைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ( மாணவர்களுக்கு கெரோனா )

மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையங்களாக சில கல்லூரிகள் செயல்பட்டு இருந்தது அதுபோன்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழக்கம்போல ஆன்லைன் (online) வழியாக தான் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நேரடியான வகைகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் இதுவரை தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு உடனடியாக கல்லூரி வளாகத்தில் வைத்து தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்று திறனாளி மாணவர்கள் கட்டாயமாக கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending