Connect with us

News

மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை !

Published

on

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக நாகை திருவாரூர் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது இதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை ஒருநாள் 25ஆம் தேதி மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்கள் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending