Connect with us

News

மழைநீர் குழாயில் கட்டு கட்டாக விழுந்த பணமழை !

Published

on

கர்நாடகாவில் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 15 அரசு ஊழியர்களின் வீட்டிற்கு சோதனைக்காக தனித்தனியாக சென்றுள்ளனர் இதில் பல லட்சம் ரூபாய் கைப்பற்றியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பொதுப்பணித்துறை பொறியாளர் சாந்த கவுடா என்பவரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் சில லட்ச ரூபாய் அவர் மறைத்து வைத்துள்ளார் அதை கைப்பற்றி உள்ளனர்.

மேலும் அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த மழைநீர் செல்லக்கூடிய குழாயை சோதனை செய்தனர்.

பின்னர் அந்த குழாயை கத்தியால் அறுத்து பார்க்கும் போது உள்ளிருந்து கட்டுக்கட்டாக பணம் விழுந்துள்ளது இதனை ஒரு பக்கெட்டில் சேகரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மொத்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

அவரிடமிருந்து மட்டும் 54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் 13 லட்சம் ரூபாய் மழை நீர் குழாயில் இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து மேலும் சில வீடுகளுக்கு சென்று தீவிர பரிசோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending