Connect with us

Cinema news

மருத்துவமனையில் ரோஜா சீரியல் விஜே அக்ஷயா !

Published

on

ரோஜா சீரியலில் அனு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அக்ஷயா சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் எனக்கு மூச்சு விட சற்று சிரமமாக இருந்தது.

அதனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தேவையான மருத்துவ உதவியுடன் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன் இப்போது சற்று நன்றாக உணர்கிறேன் எனக் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் விஜே அக்ஷயா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் இவர் மதுரையில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார்

இவருக்கு சிறிது நாளாகவே காய்ச்சல் சளி இருந்ததாகவும் அதை புறக்கணித்துவிட்டு இவர் படப்பிடிப்பிற்காக சென்றுள்ளதாகவும் இதன் பிறகு சிறிது நாட்களில் மூச்சு விட சிரமம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் பல தகவல் வெளியாகி வந்தன.

கொரோனா அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்துவது மக்கள் அனைவருக்காகவும் தான் என்று கூறியுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending