Connect with us

News

பிரிட்ஜில் இறந்த நிலையில் சிறு குழந்தை !!!

Published

on

திருவனந்தபுரத்தில் குளிர்சாதன பெட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குரங்காடு பகுதியை சேர்ந்த தம்பதி அலல் மற்றும் சுருதி இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் கழிந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது குழந்தையின் வயது ஒன்றரை வயது என கூறப்படுகிறது.

நேற்று சுமார் ஐந்து முப்பது மணி அளவில் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒளிந்து கொள்வதற்காக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியின் பின்னால் சென்றுள்ளது.

அந்த குழந்தை குளிர்சாதன பெட்டியின் பின்னால் இருக்கும் ஒரு ஒயரில் மின்கசிவு பல நாட்களாக இருந்து வந்திருக்கிறது. இதை அறியாமல் ஒளிந்துகொள்ள குளிர்சாதன பெட்டியின் பின்னால் சென்றது.

குழந்தை இதனை யாரும் கவனிக்கவில்லை பிரிட்ஜின் ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தை தூக்கி வீசப்பட்டு உள்ளது. உடனே பெற்றோர்கள் அளவெடுத்து ஓடி வந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரிட்ஜின் பின்னால் வழிந்த குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாப பலி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending