Connect with us

Cinema news

பிக்பாஸ் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று !

Published

on

முன்னணி தமிழ் நடிகரான கமல்ஹாசன் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் மேலும் இவர் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் ஆவார்.

இரு தினங்களுக்கு முன் அவர் அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய போது அவருக்கு சிறிதாக இருமல் மற்றும் சளி ஏற்பட்டு இருந்தது இதனையடுத்து அவர் பரிசோதனை செய்து கொண்டார்.

அந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாக தெரிய வந்தது இதனை அடுத்து அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவேற்றம் செய்துள்ளார்.

மக்கள் அனைவரும் வீட்டில் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும் எனவும் அவ்வாறு வெளியில் செல்லும்போது தலைக்கவசம் மற்றும் இடைவெளிவிட்டு இருக்க வேண்டும் எனவும் கொரோனா தொற்று தீர்ந்துவிட்டது என நினைத்து அஜாக்கிரதை உடன் இருக்கவேண்டாம் என அவர் கூறினார்.

இவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண பல ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பார்கள் மேலும் இவர் கொரோனா தொற்றின் காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் எப்படி பங்கேற்பார் எனவும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending