Connect with us

News

பாலியல் தொல்லை கரூர் மாணவி தற்கொலை !

Published

on

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் நேற்றைய தினம் பள்ளிக்கு சென்றுள்ளார்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார் அந்த மாணவி வீட்டில் பெற்றோர்கள் இல்லாத காரணத்தினால் தனிமையாக இருந்துள்ளார் அப்போது அவர் வீட்டின் அருகிலுள்ள வயதான பாட்டி அவளைப் பார்க்கச் சென்ற பொழுது அவள் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்துள்ளார்.

உடனே அவர் தாயாருக்கு தகவல் அளித்துள்ளார் அதன்பிறகு தாயார் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது மிகவும் மனமுடைந்து உள்ளார் உடனே காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் தாயார்.

அந்தப் புகாரின் பேரில் உடனடியாக காவலர்கள் விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டில் ஏதேனும் பொருள் உள்ளதா என ஆய்வு செய்துள்ளனர் காவல்துறையினர்.

அங்கு அந்த மாணவி ஒரு கடிதம் உண்டு எழுதிவைத்துள்ளார் அதில் எனக்கு வாழ விருப்பமில்லை என்னை பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் மேலும் நான்கு உலகத்தில் வாழ வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன் வாழ்ந்து பல மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமெனவும் நினைத்தேன் ஆனால் என்னால் முடியவில்லை என்று எழுதி இருந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் கிடைத்த கடிதத்தை வைத்து விசாரணை தொடங்கி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending