Connect with us

Corona

பள்ளி மாணவ மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல் !

Published

on

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் மாறாந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செப்டம்பர் 1ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது.

நேற்று பள்ளிக்கு வந்த 22 மாணவ மாணவிகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த ஆசிரியர்கள் உடனே சுகாதார துறைக்கு இதை பற்றி கூறினார்.

சுகாதாரத் துறையினர் வந்து மாணவ-மாணவிகளுக்கு தகுந்த குறைவான பரிசோதனை செய்து முடித்தனர். அதன் பிறகு அவர்களுக்கு முறையான விடுப்பு கொடுத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி தனிமைப் படுத்திக் கொள்ள சொன்னார்கள்.

இதனால் ஒன்றும் முடிவுக்கு வராத நிலையில் நேற்று ஒரு தினம் மட்டும் 30 மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அந்த மாணவர்களுக்கும் சுகாதாரத் துறையினர் நேரில் சென்று குழந்தை பரிசோதனை செய்து அவர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து தனிமைப்படுத்த சொன்னார்கள்.

இதனால் பெற்றோர்கள் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending