Connect with us

News

பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது !

Published

on

சிதம்பரத்தில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து வன்கொடுமை சட்டம் மற்றும் ஐந்து வழக்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவரை 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது விசாரணை செய்து சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை துன்புறுத்தக் கூடாது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுக்கு அறிவுரை செய்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending