Connect with us

News

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !

Published

on

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் குளம் போல் காட்சி அளிக்கிறது மற்றும் பல இடங்களில் பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

மின் இணைப்புகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன மேலும் சாலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பாக கன்னியாகுமரி மார்த்தாண்டம் பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரியில் இரணியல் என்ற இடத்தின் அருகில் உள்ள ரயில் செல்லுமிடத்தில் உள்ள பாலம் இடிந்து உள்ளது இதனால் ரயில் சேவை அங்கி ப்பது துண்டிக்கப்பட்டுள்ளது மேலும் சாலைகளில் ஓடும் பேருந்துகளும் வேறு வழிகளில் சென்று கொண்டுள்ளது.

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு அதைப்போலவே கன்னியாகுமரியிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் கன்னியாகுமரியை சுற்றியுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி களிலும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending