Connect with us

News

பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது

Published

on

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை மையமாகக் கொண்டே கடந்த விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பொழுதிலும் இறுதியாக ஒரு நல்ல உடன்பாடு எட்டப்படவில்லை மத்திய அரசு பின்வாங்கும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை

அதேபோன்று விவசாயிகளும் வாபஸ் வாங்கும் வரை நாங்களும் போராட்டத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என திட்டவட்டமாக முன்னரே அறிவித்து இருந்தனர்

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அந்த பாரத் பந்த்துக்கு மிகப்பெரிய ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அமைப்புகள் என அனைத்து இடங்களிலும் ஆதரவு கோரி இதை சாத்தியப்படுத்திய உள்ளனர்

குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் அரசு பாரத் பந்திற்கு முழுமையான ஆதரவை கொடுத்து நேற்றிரவே அனைத்து அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டன தனியார் பேருந்துகளும் அங்கு அதிக அளவில் ஓடவில்லை

ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் மட்டும் ஆட்டோக்களை ஏற்கவில்லை அதேபோல அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தனியார் வர்த்தக நிறுவனங்களும் சிறு சிறு வணிக கடைகள் தாமாக முன்வந்து அடைத்தனர்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் போலீசாரை மீறி நுழைந்து அனைத்துக் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending