Connect with us
பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு !!! பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு !!!

News

பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு !

Published

on

நெல்லையில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது அதில் தற்போது 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இன்று சரியாக பதினொன்றரை மணி நேர அளவில் கழிவறைக்கு சென்ற மாணவர்கள் கழிவறைக்குள் இருக்கும்போது திடீரென சுவர் உடைந்து விழுந்ததில் பல மாணவர்கள் அதில் சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக ஆசிரியர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மாணவர்களை மீட்டனர் அதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் நான்கு மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனை அடுத்து வந்து பள்ளியின் தலைமை ஆசிரியரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தலைமை ஆசிரியரை காவலர்கள் விசாரித்ததில் பல நாட்களாக தொடர்ந்து பெய்த மழையில் கட்டிடங்கள் பழுதாகி இருக்கலாம் என அவர் கூறியுள்ளார் இவ்வளவு நாள் மாணவர்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர் இந்நிலையில் பள்ளிகளில் ஆய்வுகள் நடத்திய பின் மாணவர்களை அனுமதித்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறியுள்ளார்.

மேலும் திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் உடனடியாக ஆய்வுகள் நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார் இவ்வாறு ஒரு சம்பவம் இனி நடக்கக் கூடாது எனவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending