Connect with us

Corona

பள்ளிகள் மூடப்படுமா இன்று ஆலோசனைை!

Published

on

பள்ளி மாணவர்களுக்கு கெரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

மாணவ மாணவியருக்கு கெரோனா தொற்று பரவியது எப்படி தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டிருக்கின்றன ஆகியவை குறித்து அவர் கேட்டறிய இருக்கிறார்.

முன்னதாக கடந்த 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டனர்.

இப்பொழுது விருப்பம் இருப்பவர்கள் வரலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சில பள்ளிகளில் சுழற்சி முறையில் மாணவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு கெரோனா தொற்று அதிகமாக பரவிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உட்பட 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கெரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் நிலையில் அது எப்படி ஏற்பட்டது அதற்கு தடுப்பு நடவடிக்கைகள் என்னவெல்லாம் எடுக்கப்படுகின்றன என்பது தொடர்பான விவரங்களை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டறிய இருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending