Connect with us

Corona

பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது

Published

on

பள்ளிகள் திறக்க அனுமதி, உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக சென்று வகுப்புகளைத் தொடங்க அம்மாநில முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பிறகு சில மாதங்களில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே பள்ளிகள் திறக்கப் படாமல் உள்ளன.

நாடு முழுவதையும் புரட்டிப்போட்ட கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த ஒரு மாதத்தில் சற்று இந்தியாவில் குறைந்துள்ளது எனவே மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து விட்ட அனுமதி அளிக்கப்பட்டது.

இன்னும் சில மாநிலங்களான உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இதற்கு மேலாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை கடந்த மாதம் திறந்து விட்டன.

மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தும் பட்சத்தில் அனைத்து நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் கடுமையான முறையில் பின்பற்றப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைப்பினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் மற்றும் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருக்க வேண்டும் கிருமிநாசினி கொண்டு பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் அரசு முன் வைக்கிறது.

இதனை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடக்கப்பள்ளிகள் அதாவது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி நேரடி வகுப்புகளை தொடங்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending