Connect with us

News

பட்டாசு கடையில் தீ விபத்து 6 பேர் உயிரிழப்பு !

Published

on

கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் என்னும் இடத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு பல பட்டாசு கடையில் பட்டாசு விற்பனை கோலாகலமாக நடந்து வருகிறது இதை விற்பனை செய்ய சரியான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பட்டாசு கடையின் அருகில் உள்ள பேக்கரி கடையில் இருந்த எரிவாயு சிலிண்டரும், விபத்தின்போது வெடித்துச் சிதறியது இதன் காரணமாக அங்கு சேதம் அதிகரித்து வருகிறது பல தீயணைப்பு வீரர்கள் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending