Connect with us

News

நீட் தேர்வு வினாத்தாள் 35 லட்சத்திற்கு விற்பனை !!!

Published

on

நீட் வினாத்தாளை கசியவிட்ட முறைகேடு மாணவி உட்பட 8 பேர் கைது இலங்கை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 12-09-2021 அன்று நடைபெற்றது.

இந்த தேர்வுக்கு முன்னரே நீட் தேர்வு வினாத்தாள்கள் வெளியாகி விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இதனை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக நீட் தேர்வு எழுதிய மாணவி அவரது மாமா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மநீம தலைவர் கமலஹாசன் கூறுகையில் இது ஒரு நாடு இது ஒரு தேர்வு இன்று முதல் வார்த்தையே இவ்வாறு பேசினார்.

ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள் வினியோகம் ஆகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ் கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு நாடு இது ஒரு தேர்வு இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் என்று வேதனையுடன் அவர் பேசியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending