Connect with us

News

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published

on

நீட் தேர்வை கண்டு அச்சப்பட்டு அரியலூர் மாவட்டம் சத்தம் பாடியில் நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி இவரின் மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார் இவர் மருத்துவ கனவோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு எழுதி உள்ளார்.

இவர் தேர்வு எழுதி வீட்டிற்கு வந்த உடனே அவர் முகம் சரியில்லாத இருந்ததை அவரது தந்தை கருணாநிதி கண்டுகொண்டு ஏன் இப்படி இருக்கிறாய் எனக் கேட்டதற்கு நீட் தேர்வு மிகவும் கடினமாக இருந்தது எனவும் அதில் தேர்ச்சி பெறுவது மிக கடினம் எனவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவர் தன் மகளை மன உளைச்சலில் இருந்து சிறிது தீட்டியுள்ளார் அதன் பிறகு தனிமையில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்பொழுது நீட் தேர்வால் தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending