Connect with us

News

நீட் தேர்வு எழுதிய சௌந்தர்யா தற்கொலை ?

Published

on

நீட் தேர்வு எழுதிய அச்சத்தில் மாணவி சவுந்தர்யா தற்கொலை வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலைபாரம்பட்டு கிராமத்தில் மாணவி சவுந்தர்யா வசித்து வந்தார் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னால் நடந்த நீட் தேர்வு எழுதியுள்ளார்.

இவர் நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் நீட் தேர்வில் மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தாலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த மூன்று நாட்களில் நீட் தேர்வு அச்சத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதேபோன்று இன்னும் பல மாணவர்கள் இவ்வாறு செய்யாமல் தடுக்க தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அவர்கள் அறிவுரையை நாடி இவ்வாறு முட்டாள்தனமான எண்ணங்களை தவிர்க்க முடியும்.

மாணவி சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டதாக எழுந்த புகாரில் தலையாரும்பட்டு அரசு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் மாணவி நீட் தேர்வு அச்சத்தில் தான் இறந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காவல்துறையினர் வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending