Connect with us

News

நீட் தேர்வால் தற்கொலை மாணவி தீக்குளிப்பு !!!

Published

on

இந்தியாவில் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வு கட்டாயமாக எழுதியாக வேண்டும் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும். நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அன்று நடைபெற்றது.

இந்தத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வின் மதிப்பெண் குறித்து அச்சத்தில் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர் இத்துடன் இது நான்காவது தற்கொலை ஆகும் நீட் தேர்வு மிகவும் கடினமாக இருப்பதே இதன் காரணம்.

மாணவர்கள் சிறிது விழிப்புணர்வு குரலுடன் இருக்க வேண்டும் தற்கொலை உணர்வை கட்டுப்படுத்த அரசு வழங்கியுள்ள 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உரையாடினால் தற்கொலை எண்ணத்தை முழுவதுமாக விட்டுவடலாம். அந்த வகையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரியில் நீட் தேர்வு எழுதிய மாணவி அனுசுயா தீக்குளித்துள்ளார்.

இந்த தேர்வு எழுதிய உடனே இந்த மாணவி தேர்வில் தோல்வியடையும் என பயத்திலேயே இருந்துள்ளார் இதை அவர் பெற்றோர்கள் கவனித்து உள்ளனர்.

அந்த மாணவியின் சோகத்தை போக்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந்த மாணவியை சமாதானப்படுத்தி சென்றனர். இருப்பினும் அதை கேட்காத இந்த மாணவி சிறிது நேரம் கழித்து அவர் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனுசுயாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு மாணவிக்கு 40% உடல் எரிந்து விட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending