Connect with us

News

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இன்று அறிவிப்பு !

Published

on

தென் கிழக்கு பருவ மழை காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து தற்பொழுது ஓய்ந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இதன் காரணமாக பல மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட வட்டாட்சியர்கள் விடுமுறை அளித்து வருகிறார்கள்.

கனமழை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு 27 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அதாவது நாளை விடுமுறை அளித்துள்ளார் நெல்லை மாவட்ட வட்டாட்சியர் குறிப்பாக.

திருவாரூர் தூத்துக்குடி புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி தூத்துக்குடி திருவாரூர் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்து இரண்டு நாட்களுக்கு கனமழை மற்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது இதன்படி பிற மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசு மக்களுக்கு அறிவுரை வழங்கிவருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending