Connect with us

Cinema news

நடிகர் விவேக் மரணத்தில் திடீர் திருப்பம் !!!

Published

on

நடிகர் விவேக் அவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் மட்டும் ரசிகர்களுக்கு சமூக அக்கறையை போதிப்பதோடு நிருத்தி விடாமல் நிஜ வாழ்க்கையிலும் சமூக சேவகராக திகழ்ந்தார் நடிகர்விவேக்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள நடிகர் விவேக் மரங்கள் நடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் எப்போதும் போல படப்பிடிப்பில் இருந்த நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து மயங்கி விழுந்த அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார் அவரின் மறைவு அனைவருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

அவர் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் இதனால் தான் இவர் உயிர் இழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் தேசிய மனித உரிமை ஆணையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் நடிகர் விவேக் விவேக் மரணம் அடைந்ததாக கூறி புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்நிலையில் அவரின் புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

Trending