Connect with us

News

தினமும் இரவில் மாணவிக்கு பாலியல் தொல்லை !

Published

on

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரியான சுரபி நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளை அவர்கள் தங்கியிருக்கும் கல்லூரிக்கு சொந்தமான விடுதிக்கு சென்று கல்லூரி தாளாளர் பாலியல் அத்துமீறல்.

அமமுக கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜோதி முருகன் என்பவர் இந்த கல்லூரியின் தாளாளர் ஆக பணியாற்றினர் அவர் தினமும் இரவு நேரத்தில் கல்லூரிக்கு சென்று விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை அவரது காரில் கூட்டிச் சென்றுள்ளார்.

இதனைப் பொறுக்க முடியாத சக மாணவிகள் திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் சென்று 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்கு வந்த காவல் துறையினரிடம் இது போன்ற தகவல் அளித்துள்ளனர் மாணவிகள் ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என கூறி சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

தினமும் இரவில் மாணவிக்கு பாலியல் தொல்லை !

இதனால் மாணவிகள் மாலை நேரத்தில் திண்டுக்கல் சாலை அருகே போராட்டம் நடத்தினர் மேலும் இரண்டாவது நாளாக மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இதன் காரணமாக அந்த கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன உடனடியாக மாணவர்கள் இவ்வளவு நாள் அவர்கள் படிப்பிற்காக செலவழித்த ரூபாயை திரும்ப தர வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் காவல் துறையினர் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் கல்லூரியின் தாளாளர் ஜோதிமருகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் அவர் தலைமறைவாகி விட்டார். ஆனால் இது மொத்தத்திற்கும் உடந்தையாக இருந்த கல்லூரி விடுதியின் வார்டன் அர்ச்சனா கைது செய்யப்பட்டு அவரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending