Connect with us

News

தலிபான் அமைச்சரவை பட்டியல் வெளியீடு

Published

on

தலிபான்கள் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர் தலைநகர் கபூலை ஆக்கிரமித்து 3 வாரங்களுக்கு மேல் ஆகிறது.

ஆனல் கூட இன்னும் அவர்கள் அங்கு ஆட்சி அமைக்க வில்லை அவர்களுக்குள் புதிதாக அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது இதுவே அவர்கள் ஆட்சி அமைக்க தாமதப்படுத்தி உள்ளது.

ஆனால் இதை தாலிபன்கள் மரத்து நாங்கள் ஆட்சி அமைத்து விட்டோம் ஆனால் இன்னும் சிறு சிறு வேலைகள் உள்ளன என தெரிவித்துள்ளனர்.

தலிபான்களின் நிறைய குழுக்கள் இருக்கின்றன அவர்களின் ஹக்கானி குழுவினர் தங்களுக்கு அதிகாரமிக்க பதவி வேண்டும் என்று உள்ளனர் அதற்கு தலிபான்கள் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான முல்லா பரதார் மறுத்து வந்தார்.

இந்த நிலையில் தேவைப்படும் துறைகளுக்கு மட்டும் அமைச்சர்களையும் புதிய பிரதமர் களையும் தலிபான்கள் அறிவித்துள்ளனர் புதிய பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் தேர்வு செய்யப்பட்டார் இவர் ஐநாவின் சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் இருக்கிறார்.

இவரை தேர்ந்தெடுக்க காரணம் இவர் ராணுவத்தை விடுத்து முழுமையான மதநல்லிணக்கத்தை கொண்டவர் மற்றும் இவர் தலிபான்களின் சொர்க்கபுரியான கந்தஹாரின் மகன்.

சீராஜ் ஹக்கானிக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். இவர் அமெரிக்காவின் மிகவும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

மற்றும் முல்லா ஓமரின் மகன் முல்லா யாகூப்புக்கு பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டிருக்கிறது மற்றும் முல்லா பிரதார், மவுல்லி ஹவி ஹனாவி ஆகிய இருவருக்கும் துணை பிரதமராக பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரசு தற்காலிகமாக அரசு மட்டுமே என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending