Connect with us

Corona

தமிழ் நாட்டு எல்லையில் தீவிர கண்காணிப்பு !

Published

on

தமிழ் நாட்டு எல்லையில் தீவிர கண்காணிப்பு கேரளாவில் கோரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி க்கு மளிகை காய்கறி மற்றும் அவசர தேவைகளுக்கு பலரும் வந்து செல்கின்றனர்.

தற்போது கேரளாவில் கோரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அங்கிருந்து பொள்ளாச்சிக்கு மதிமுக கோவைக்கு வரும் கோபலபுரம் ஆகியவற்றில் அதிகாரிகள் முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரனோ சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் ஓட்டுனர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது, மற்றும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டு (எல்லையில் தீவிர கண்காணிப்பு)

கேரளாவில் இருந்து தகுந்த சான்றிதழ்கள் இல்லாமல் வரும் அனைத்து வாகனங்களும் முடக்கப்படும் மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையில் மிகுந்த கண்காணிப்புடன் உள்ளதாகவும் அனைத்து சுகாதாரத்துறை அமைப்பும் இணைந்து செயல்பட்டு தமிழ்நாட்டிற்குள் கேரளாவில் இருந்து வரும் அனைத்து சரக்குகளையும் தகுந்த முறையில் பரிசோதித்த பின்னரே தமிழகத்திற்கு வண்டிகள் அனுப்பப்படுகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending