Connect with us
தமிழகத்தில் 10 புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி !!! தமிழகத்தில் 10 புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி !!!

News

தமிழகத்தில் 10 புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி !

Published

on

2022 மற்றும் 2023 ஆண்டிற்கான கல்வியாண்டில் சுமார் 25 கோடி செலவில் அரசு கலைக்கல்லூரிகள் துவங்க கடந்த ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது தற்போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது அரசு தரப்பில் இருந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது அதில் இந்த அரசு கலைக் கல்லூரிகள் துவங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் கலைக் கல்லூரிகளில் ஆர்வமுள்ள நடுத்தர மக்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது மேலும் எந்த இடங்களில் எல்லாம் கல்லூரிகள் துவங்க உள்ளது என பட்டியல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மாவட்டம் ஈரோடு மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் தருமபுரி மாவட்டம் வேலூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் சேர்ந்து கல்வி கற்கலாம் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மட்டும் கல்வி கற்கும் வகையில் கல்லூரி அமைக்கப்பட உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending