Connect with us

Corona

தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் இன்று தொடக்கம் !

Published

on

தமிழ்நாட்டில் இன்று குழந்தை தடுப்பூசி முகாம்கள் பல இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது 40ஆயிரம் முகாம்களில் 20 லட்ச தடுப்பூசி செலுத்த இலக்கை சுகாதார அமைப்பு இந்திரனையும் செய்துள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த அரசு நிர்ணயித்துள்ள நிலையில் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர், உள்ளாட்சித் துறையினர் ஆகியோர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அங்கன்வாடி ஊழியர்களை கோவின் செயலியில் பதிவு செய்ய பயன்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி முகாம்களில் கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

காரணம் என்னவென்றால் நமது அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தின் கொரனோ தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த அதிரடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை நாளொன்றுக்கு லட்சம் பேர் என்ற விகிதத்தில் மூன்று கோடியே 48 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நீங்களும் உங்கள் அருகில் உள்ள சுகாதார மையங்களில் சென்று மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending