Connect with us

Corona

தமிழகத்தில் இன்று 10 வது மெகா தடுப்பூசி முகாம் !

Published

on

தமிழகத்தில் வாரம் ஒருமுறை செலுத்தப்பட்ட தடுப்பூசி முகாம் இப்போது வாரத்தில் இரண்டு நாட்கள் என வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பத்தாவது மெகா தடுப்பூசி முகமாக இன்று 50 ஆயிரம் மையங்களில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது இதில் பல மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் முதல் தவணை இரண்டாம் தவணை என பல மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாத பல லட்சம் பேர் உள்ளனர் அவர்களுக்கு அறிவிப்பு வழங்கி அவர்களையும் தடுப்பூசி செலுத்த வற்புறுத்தி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தொடர்ந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகின்றனர் மேலும் அங்குள்ள மக்களும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மக்கள் உடனடியாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இது ஒன்றுதான் வழி எனவும் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending