Connect with us

News

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை !!!

Published

on

புதிய காற்றழுத்த தாழ்வு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளது இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு மட்டும் அதனுடன் சேர்ந்து ஒட்டி உள்ள மத்திய கிழக்கு வங்க கடலில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகிறது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தேனி கோயம்புத்தூர் திண்டுக்கல் ஈரோடு சேலம் திருவள்ளூர் ராணிப்பேட்டை செங்கல்பட்டு போன்ற டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என அறிவிக்கப்படுகிறது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதியில் லேசான மழை பெய்யலாம் எனவும் செப்டம்பர் 13 முதல் 14 வரை வடக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது மேலும் நாகை பாம்பன் எண்ணூர் தூத்துக்குடி புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending