Connect with us

News

தமிழகத்திற்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு !

Published

on

தமிழகத்தில் இப்போது அமலில் உள்ள ஊரடங்கு சிறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

வரும் தீபாவளியை முன்னிட்டு கடைகள் பேக்கரி மற்றும் உணவகங்களில் 11 மணி வரை மட்டுமே செயல்படலாம் என இதற்கு முன் இருந்த கட்டுப்பாடுகள் தளர்ந்து 11 மணிக்கு மேலும் கடைகள் உணவகங்கள் போன்றவைகளை திறக்கலாம்.

மற்றும் திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட தளர்வுகளுக்கு எந்த மாற்றமும் இல்லை எனவும் திருவிழாக்கள் அரசியல் நிகழ்வுகள் நடைபெற கூடாது எனவும் அறிவித்தார்.

நவம்பர் 1 முதல் படப்பிடிப்பு தளங்களுக்கு தேவையான ஆட்களுடன் படப்பிடிப்பை எடுக்கலாம் எனவும் படப்பிடிப்பு எடுக்கும் நபர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மற்றும் திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி விதித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending