Connect with us

News

தமிழகத்திற்கு எச்சரிக்கை

Published

on

தமிழகத்திற்கு இன்று மழை நாள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வந்துள்ளது.

இதனையொட்டி தேனி, கோவை, திண்டுக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (தமிழகத்திற்கு எச்சரிக்கை)

தேனி, கோவை, திண்டுக்கல், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது, சென்னை வானிலை மையம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஏரி குளங்கள் நிறைந்து விவசாய பயன்பாட்டிற்காக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் மணிக்கு 4 அடி அளவுக்கு உயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியின் சுற்றுலாத் தலங்களான திருப்பரப்பு அணையில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொய்யும் கன மழைக்கு தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சேலம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் விவசாயிகள் உற்சாகமாக நாற்று நடும் பணியில் தீவிரமாக உள்ளார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending