Connect with us

Cinema news

தந்தை தாய் உட்பட 11 பேர்மீது நடிகர் விஜய் வழக்கு

Published

on

விஜயின் புதிய வழக்கு தாய் தந்தை உட்பட 11 பேர்கள் மீது நடிகர் விஜய் வழக்கு பதிவு செய்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என அறிவித்துள்ள நிலையில் நடிகர் விஜய் தனது பெயரையோ தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி தனது தாய் மற்றும் தந்தை உட்பட 15 நபர்கள் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் விஜயின் பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தாயார் ஷோபா விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து கடந்த வாரம் அவர் சென்னையில் உள்ள ஒன்பது இடங்களில் இடங்களில் சுழற்சியாக போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார்.

இதனையடுத்து நடிகர் விஜயின் பெயரை பயன்படுத்தி மற்றும்அவரின் ரசிகர் மன்ற பெயரை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெறுவதாக மற்றும் பல கூட்டங்கள் நடைபெறுவதாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த வழக்கு வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending