Connect with us

News

தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் சிறுமி ஒருவர் பலி !!!

Published

on

சிக்கன் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிப்பு சிறுமி பலி, நேர்ந்தது என்ன திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்ற பகுதியில் அண்ணா சாலை எதிர்ப்புறம் ஸ்டார் பிரியாணி ஹோட்டல் உள்ளது. இதனை காதர் பாஷா என்பவர் நடத்தி வருகின்றார்.

இந்த உணவகத்தில் வியாழக்கிழமை பண்டு தந்தூரி சிக்கன் சாப்பிட்ட ஆரணி பகுதியை சார்ந்த ஏழு பேருக்கு தீராத வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த ஏழு பேரையும் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஏழு பேருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் அதே ஹோட்டலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். பின்பு நான்கு பேரையும் மாலை 3 மணி அளவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

அவர்களில் 10 வயதுடைய ஒரு சிறுமி லக்சனா என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த செவன் ஸ்டார் ஹோட்டலில் அசைவம் சாப்பிட தாக மேலும் 18 பேர் இன்று காலை சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

இந்த அசம்பாவிதத்தை அறிந்த ஆரணி போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் மேலும் சில அதிகாரிகளுடன் ஹோட்டலில் சென்று உணவுகளை சேகரித்து உணவு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஹோட்டலில் கெட்டுப்போன கோழிகள் பயன்படுத்தினார்களா அல்லது பிரியாணியில் ஏதேனும் மனிதர்களை அச்சுறுத்தும் வேதி பொருட்கள் கலக்கப்பட்ட என்ற கோணத்தில் உணவுத்துறை அமைச்சர் விசாரித்து வருகின்றார்.

மேலும் இந்த ஹோட்டலில் சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த செவன் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டு அதற்கான சிசிடிவி காட்சிகள் போலீசார் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைவரின் விருப்பமான சிக்கன் பிரியாணியை சாப்பிட்டதால் சிறுமி பரிதாப பலி மேலும் 22 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending