Connect with us

Corona

தடுப்பூசி செலுத்தி கொண்டால் வீட்டுமனை !

Published

on

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இலவச வீட்டுமனை பவானியில் மெகா தடுப்பூசி முகாம் இன்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 2சென்ட் வீட்டுமனை 10 பேருக்கு வழங்கப்படும் என வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

குறிப்பாக திருவள்ளூர், திருவேற்காட்டில் தடுப்பூசி சேர்த்துக் கொள்பவர்களுக்கு பெரிய அளவிலான பரிசுத்தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் அதிக அளவில் நடைபெறுகிறது மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நோக்கத்தில் தமிழக அரசு அதிக சலுகைகள் வழங்கி வருகிறது குறிப்பாக சில இடங்களில் மொபைல் போன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

இதேபோல சென்னை,கோவை திண்டுக்கல் போன்ற இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டிருந்ததை அடுத்து ஆட்சியர் இன்று துவங்கி வைத்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending