Connect with us
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஊதியம் நிறுத்தம் !!! தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஊதியம் நிறுத்தம் !!!

Corona

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஊதியம் நிறுத்தம் !

Published

on

தடுப்பூசி செலுத்தாத அரசு மின்சார துறை ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என ஒரு சுற்றறிக்கை அரசு தரப்பில் வெளியாகியுள்ளது.

அதில் தடுப்பூசிகள் இரண்டு தவணைகள் செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தாதவர்கள் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது எனவும் இது மின்சாரத் துறையில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் இதில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் ஏதேனும் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த முடியாமல் இருப்பவர்கள் மட்டும் அதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மேலும் தடுப்பூசி இரு தவணைகள் செலுத்தியவர்கள் அதற்கான சான்றிதழையும் அவர்கள் பணிபுரியும் மேலாளரிடம் கொடுத்து இருக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது.

தற்போது இன்னும் சில அரசு துறைகளில் இவ்வாறு சுற்றறிக்கை வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்த அரசு தரப்பில் முழு நடவடிக்கைகளும் எடுத்து வரப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending