Connect with us

News

சென்னைக்கு திரும்பிய புயலால் பெரும் பாதிப்பு !

Published

on

சென்னைக்கு திரும்பிய காற்றழுத்த தாழ்வு மையத்தினால் சென்னையை சுற்றி வசிக்கும் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர் இதனை தடுக்கும் வகையில் அரசு முயற்சி எடுத்து வருகிறது.

நேற்றைய தினம் வெளியான தகவலின்படி கடலூர் மாவட்டத்தை கடந்து இந்த காற்றழுத்த தாழ்வு மையம் நகரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புது மாற்றமாக சென்னையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் மீன் பிடிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது மேலும் மழையின் காரணமாக வெளியில் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

தற்போது சென்னையில் கனமழை பெய்து வருவதால் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவானதில் இருந்து அனைவரும் பயத்துடனே காணப்படுகின்றனர் இது எப்போது புயலாக மாறலாம் எனவும் அச்சத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending