Connect with us

News

சீனா உருவாக்கிய செயற்கை சூரியன் ஆபத்தா(HL-2M Tokomak)

Published

on

சீனர்களின் HL-2M Tokomak என்னும் சைக்கிள் சூரியன் புதுவித சாதனை ஒன்றை படைத்துள்ளது.
சீனர்கள் என்றாலே வித்தியாசத்திற்கும் புதுமைக்கும் பெயர் போனவர்கள் அந்த புதுமைகளில் ஒன்றுதான் செயற்கை சூரியன்.(சீனா)

எனவே உலக உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் சூரியன் அளவில் மிகவும்பெரியது அதைக்காட்டிலும் பூமி மிகச்சிறியது இந்நிலையில் செயற்கையான சூரியனை உருவாக்கும் பணிகளை சீனா பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.

அதிக அளவில்லான ஆற்றல்:

நாம் இப்போது அணு உலைகளில் அணுக்கரு பிளவு எனும் முறையை தான் பயன்படுத்தி வருகிறோம் இந்த முறையில் யுரேனியம் அல்லது புளுடோனியம் நியூட்ரானுடன் தாக்கி சிறு சிறு அணுக்களாக பிரிப்பார்கள் அப்படி பிரிக்கும் போது அதிக அளவில்லான ஆற்றல் வெளிப்படும்.

அந்த ஆற்றலை பயன்படுத்தி தான் அணு உலைகளில் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இந்த செயன்முறையின் போது அதிக அளவில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சுகள் அதிக அளவில் வெளிப்படும்.

அணுக்கரு வீச்சு:

இதற்கு நேர் எதிர் செயல் முறை தான் அணுக்கரு இணைவு இந்த செயல்முறையில் இரு சிறு அணுக்கள் ஒரே அணுவாக இணைக்கப்படும்.

இந்த முறையில் இரு நன்மைகள் உண்டு ஒன்று இதிலிருந்து வெளிப்படும் ஆற்றலானது அணுக்கரு பிளவின் போது ஏற்படும் ஆற்றலை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும்.

இதற்கு மற்றொன்று இந்த முறையில் பாதிப்பு ஏற்படுத்த கூடிய அணுக்கரு வீச்சு எதுவும் வெளிப்படாது.

300க்கும் அதிகமான விஞ்ஞானிகள்:

அணுக்கரு இணைப்பு மூலம் கழிவு குறைவாகவே இருக்கும். இதனால் சமீப காலமாக உலக விஞ்ஞானிகள் பலரும் தூய்மையான ஆற்றலைப் பெறும் நோக்கில் பாதுகாப்பான அணுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான் சீனாவிற்கு அருகே HL-2M Tokomak எனப்படும் அணுக்கரு உலையில் சீனாவின் நேஷனல் நியூக்ளியர் கார்ப்பரேஷன்‌ அமைத்தது.

ஆகவ பல ஆண்டுகளாக இந்த HL-2M Tokomak தொடர்பான சோதனையில் 300க்கும் அதிகமான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனா முதன் முதலில் ஸ்விட்ச் ஆன்:

கடந்த 2019ஆம் ஆண்டு இந்த அணுஉலையை சீனா முதன் முதலில் ஸ்விட்ச் ஆன் செய்து இயக்கிப் பார்த்தது.

அப்போது சூடான பிளாஸ்மா வளையத்திற்குள் வலிமையான காந்தம் புலங்களை செலுத்தியபோது அணுக்கரு பிணைப்பு வினை ஏற்படத் தொடங்கி 150 மில்லியன் டிகிரி க்கும் அதிகமான வெப்ப நிலை உருவானது.

சில வினாடிகள் மட்டுமே நீடித்ததன:

ஆனால் அந்த வெப்பநிலை குறிப்பிட்ட சில வினாடிகள் மட்டுமே நீடித்ததாகவும் அதிக வெப்பத்தை நீண்ட நேரம் நீடிக்க வைப்பது தங்களது இலக்கு என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த அணுக்கரு பிணைப்பு வினை மூலம் 120 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உருவாகி 101 வினாடிகள் வரை நீடித்தது.

அதேபோல 160 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உருவாகி அது 20 வினாடிகள் வரை நீடித்துள்ளது.

சீனர்களி தயாரிப்பு எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியும் பார்க்கலாம் சூரியன் வெற்றிகரமாக செயல்படுமா இல்லையா என்று.

1 Comment

1 Comment

  1. Pingback: Post Office ATM card பெறுவது எப்படி மற்றும் நன்மைகள் -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending