Connect with us

Cinema news

சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டு நீக்கம் !!!

Published

on

சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டு தடையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்தியாவில் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலருக்கு சிம்பு விளங்க வேண்டிய நிலுவை தொகையை திருப்பி தரும் வரை சிம்புவின் படத்திற்கு ஒப்புதல் வழங்குவது இல்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு ரெட் கார்ட் விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து சிம்பு தரப்பில் அவரது தாயார் உஷா ராஜேந்திரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சிம்புவுக்கு விதிக்கப்பட்டு இருந்த ரெட் கார்டு தடையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.

மேலும் AAA படத்தின் பணப்பிரச்சனை தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் சிம்பு தரப்பின் இடையிலான வழங்கு நிலுவையில் உள்ளதால் நீதிமன்றம் மூலம் தீர்வு காணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் படத்திற்கு ஒத்துளைப்பு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டு நீக்கம்)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending