Connect with us

News

சாலைகளில் சுற்றினால் 10000 ரூபாய் அபராதம் !

Published

on

திருச்சி மாநகராட்சி சுற்றியுள்ள சாலையோர சாலையோர பகுதிகளிலோ அல்லது தெருக்களிலோ யாருக்காவது சொந்தமான கால்நடைகள் சுற்றித் திரிந்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம்.

திருச்சியில் மட்டுமில்லாமல் பல இடங்களிலும் இது போன்று சாலையில் ஆடுகள் மாடுகள் என அனைத்து கால்நடைகளும் சுற்றித்திரியும் இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

திருச்சி மாநகராட்சியில் இதுபோன்று பல இடங்களில் மாடுகள் ஆடுகள் என சுற்றித்திரியும் காலையில் வீடுகளிலிருந்து விரட்டி விடப்படும் இந்த ஆடுகள் மற்றும் மாடுகள் இரவு நேரங்களில் தான் வீட்டிற்கு மறுபடியும் செல்லும்.

அதுவரை இந்த கால்நடைகள் தெருக்களில் சாலையோரங்களிலும் சாலை நடுவிலும் சென்று தூங்கி கொண்டிருக்கும் இதனால் சாலைகளில் பலமுறை விபத்தும் ஏற்பட்டுள்ளது இதனை தடுக்கவே பல இடங்களில் இதுபோன்று அபராதங்கள் விதிக் கப்பட்டு வருகின்றன.

திருச்சி மாநகராட்சியை சுற்றி கால்நடைகள் வெளியில் சுற்றினால் அதன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending