Connect with us

News

சாயத் தொழிற்சாலையில் விஷவாயு 2 பேர் பலி !

Published

on

திருப்பூரில் தனியாருக்கு சொந்தமான சாயத் தொழிற்சாலை காந்திநகர் வித்தியாலயம் என்ற இடத்தின் அருகில் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

தற்போது சாய் தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்ய 5 பேர் இணைந்து சுத்தம் செய்து கொண்டிருந்த போது உள்ளே இருந்த ஒருவருக்கு மட்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது உடனே உள்ளே இருந்த நான்கு பேர் சத்தம் எழுப்பினார்.

இதனை அடுத்து வெளியிலிருந்த தொழிற்சாலையின் மேலாளர் தினேஷ் உள்ளே சென்றதும் அவர் மயக்கமடைந்தார் உடனே வெளியில் இருந்த நபர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் 3 பேரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending