Connect with us
கோயில்களுக்கு செல்ல அனுமதி இல்லை !!! கோயில்களுக்கு செல்ல அனுமதி இல்லை !!!

Corona

கோயில்களுக்கு செல்ல அனுமதி இல்லை !

Published

on

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி பெறப்படும் என கோயில் நிர்வாகம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

தற்பொழுது இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் ஏற்றம் மற்றும் இறக்கமாக உள்ளதால் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது இதேபோன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல தற்போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இதைப்போன்று ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் கோயில்களுக்கு செல்ல நேற்றைய தினம் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல இரண்டு தவறு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் சான்றிதழை காட்டிய பின்னரே ராமேஸ்வரம் எல்லையில் செல்ல முடியும் என திட்டவட்டமாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending