Connect with us

News

கோயம்பேட்டில் ஒடும் அரசு பேருந்தில் தீ விபத்து !!!

Published

on

சென்னை கோயம்பேடு அருகே அரசு பேருந்து வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென தீவிபத்து ஏற்பட்டு அந்த இடத்தையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அருகே அரசு பேருந்து வந்து கொண்டிருக்கும்போது இன்ஜின் அருகே புகை சூழ்ந்து உள்ளது இதனை கண்ட பொதுமக்கள் ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்பு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டுனர் பார்க்கையில் இன்றிலிருந்து தீ பற்றி எரிந்து உள்ளது. இதனை அணைக்கும் பணியில் ஓட்டுநரும் கண்டக்டரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் பொதுமக்களும் உதவி செய்துள்ளார்கள்.

சற்று நேரத்தில் வண்டி முழுவதும் தீ சூழ்ந்து புகை மண்டலமாக எழுந்துள்ளது உடனே தீயணைப்பு காவல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து.

கோயம்பேடு தீயணைப்பு துறையினரும் மற்றும் அருகே மற்றொரு தீயணைப்பு வாகனமும் வந்து தீவிரமாக தீயணைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது நடுவழியில் பேருந்து தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக எந்த மக்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை முன்னதாகவே கண்டு இந்த பாதிப்பிலிருந்து தப்பித்து விட்டனர். இதன் பிறகு அரசு ஓட்டுனர் தலைமையிலான அதிகாரிகள் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending