Connect with us

Corona

கொரோனா மூன்றாம் அலை மிகவும் கொடூரமானது

Published

on

பிரிட்டன் மற்றும் பிரேசிலில் இருந்து இந்தியா வந்த பயணிகளிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

எனவே புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் மையம் நடத்திய பரிசோதனையில் உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு குறித்து தெரிய வந்துள்ளது.

புதிய விளைவுகளும் தோன்றும்:

அப்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை யால் ஏற்பட்ட பேரழிவுகள் காரணமான டெல்டா மரபணு மாற்ற வைரஸ் நினைப்பதை விட மிகவும் கொடூரமானதாக இருக்குமோ என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆகவே இந்தியாவில் டெல்டா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த அறிகுறிகளுடன் காது கேளாமை தீவிர வயிற்றுக் கோளாறுகள் உறுப்புகள் சிதையும் அளவிற்கான ரத்தம் உறைதல் ஆகிய புதிய விளைவுகளும் தோன்றுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

50 சதவீத அதிக தொற்றும் தன்மை:

B11282 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் ஒருவரின் பாதித்தால் உடல் எடை இழப்பு சுவாச பாதையில் பாதிப்பு நுரையீரல் புண்கள் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது பிரிட்டனில் முதலில் காணப்பட்ட ஆல்பா மரபணு மாற்ற வைரசை விட இந்தியாவில் பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரஸ் 50 சதவீத அதிக தொற்றும் தன்மை உடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது

மிகவும் ஆபத்தான அறிகுறிகள்:

பிரேஸில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட.

என நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது மனித உடலின் நோய் எதிர்ப்பு திறனில் இருந்து உருமாற்றம் அடைந்த கிருமி எப்படி தப்பிக்கிறது என்பதை கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் புனே நுண்ணுயிரியல் மையம் தெரிவித்துள்ளது.

பெண்ணின் உடம்பில் 32 முறை உருமாறிய கொரோனா

தென்னாப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடம்பில் கொரோனா 32 முறை உருமாறி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்தது:

அவர்கள் மேலும் கூறுகையில் தென் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட 36 வயது இளம்பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

ஆகவே எய்ட்ஸ் காரணமாக அந்த பெண்ணின் உடலில் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த சூழலில் அவரது உடலை ஆராய்ச்சி செய்ததில் 216 நாட்களாக கொரோனா வைரஸ் 32 வகைகளாக உரு மாறி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோவி ஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்புத்திறன்

கோ வேக்ஸினை விட கோவி ஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்புத்திறன் உருவாகிறது என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஆய்வில் தெரிய வந்திருக்கிறது:

இரண்டு டோஸ்களையும் உடலில் செலுத்திய பிறகு கோவேக்ஸின் மற்றும் கோவீ ஷீல்டு இரண்டுமே சிறந்த பலன்களை தருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்நிலையில் கோவீ ஷீல்டு கூடுதலான நோய் எதிர்ப்புத்தன்மை உருவாவதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

மொத்தம் 13 மாநிலங்களைச் சேர்ந்த 515 சுகாதார பணியாளர் இடம் இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

இவர்களில் 465 பேருக்கு கோவிஷீல்டும், 90 பேருக்கு கோவேக்ஸின் செலுத்தப்பட்டது இரண்டாவது டோஸ்களும் செலுத்தப்பட்ட இருபத்தொரு நாள் முதல் 36 நாட்களுக்குள் சிறப்பான நோய் எதிர்ப்பு திறன் உருவானது கண்டறியப்பட்டது.

செரோ பாசிடிவிட்டி கண்டறியப்பட்டுள்ளது:

கோவிஷீல்டும் தடுப்பூசியில் 98 சதவீதமும் கோவேக்ஸின் தடுப்பூசியில் 80 சதவீதமும் செரோ பாசிடிவிட்டி கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இரு தடுப்பூசிகளும் கொரோனா நோயின் தீவிரத்தை குறைக்கின்றன உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கின்றன.

இந்த ஒப்பீடு என்பது முதற்கட்ட நிலை என்பதால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவே மருத்துவத் துறையினர் இது ஒரு வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்

2 Comments

2 Comments

  1. Pingback: 10ஆம் வகுப்பு தகுதிக்கு மாதம் ₹ 38,500 ரூபாய்/Government job....

  2. Pingback: இந்தியாவில் மூன்றாவது அலை - Job newscrowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending