Connect with us

News

கேரளாவில் காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு !

Published

on

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஃபேஸ்புக் மூலமாக இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஷிபா என்ற பெண்ணை சிறிது காலங்களாக காதலித்து வந்தார்.

மேலும் ஷிபாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதை அறிந்த இவர் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்தார்.

ஆனால் ஷிபாவிற்கு இந்த விஷயம் தெரிந்தவுடன் ஷிபா கடைசி முறையாக பார்க்க வேண்டும் எனவும் மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி அவரை இடுக்கி மாவட்டத்திற்கு அழைத்துள்ளார்.

அவரும் இடுக்கி மாவட்டத்திற்கு அவர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஷிபா கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து அவர் முகத்தில் ஊற்றி உள்ளார் இதில் அருண்குமாரின் ஒரு கண் பார்வை பறிபோனது.

மேலும் அருண்குமாரை அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் மேலும் அங்கு வந்த காவலர்கள் அவரை விசாரித்து மேலும் அவரிடம் வாக்குமூலம் பெற்று ஷிபாவை அவரது வீட்டிற்கு சென்று காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending